ஜனாதிபதி வேட்பாளரின் உளறல்

"சுதந்திர இந்தியவின் குடிமக்களாகிய நாம் பர்தா அணியும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பதுதான் இந்திய பெண்களுக்கு உண்மையான மரியாதை" என்று திருவாய் மலர்ந்துள்ளார் ராஜஸ்தான் கவர்னெர் பிரதிபா பாட்டில். மேலும் முகலாயர்களிடம் இருந்து இந்திய பெண்களை பாதுகாப்பதற்குத்தான் பர்தா அணியும் பழக்கம் ஏற்படுதப்பட்டது என்று கூறியுள்ளார்.அப்படியானால் இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் மட்டும்தான் பாதுகாப்பு அவசியம் என்று நினைத்தார்களா? எல்லா துறைகளிலும் பெண்கள் வேகமாக முன்னேறி வருவதால் பர்தா அணியும் பழக்கத்தை ஒளிப்பது நமது கடமை என்று கூறி அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளர். இன்று சுதந்திர இந்தியாவில் பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் இவர் கண்களுக்கு தெரியவில்லை.முஸ்லிம் பெண்கள் மட்டுமே அணியும் பழக்கத்தில் இருக்கும் பர்தாவை ஒளித்துகட்டுவதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. தனது பாசிச சிந்தனைக்கு திரிக்கப்பட வரலற்றைத் துணைக்கு கூப்பிடுகிறார்.சங்க் பரிவாரின் திரிக்கப்பட்ட வரலாறுகள் படித்த பொறுப்புள்ள அரசு பதவி வகிப்பவர்களையே இப்படி மாற்றும்பொது இவ்வராலறுகளைப் படிக்கும் குழந்தைகளின் நிலையை சொல்லவா முடியும்?